கொஞ்சம் லேட்டாகிருந்தா என்ன ஆகிருக்கும்??? டிக்டாக் வீடியோ முயற்சியில் உயிருக்கே ஆபத்தாகிப் போன விபரீதம்!!

Last Updated: செவ்வாய், 9 ஜூலை 2019 (13:21 IST)
டிக்டாக்கில் பதிவேற்றுவதற்காக ஒரு இளம்பெண், தற்கொலை செய்து கொள்வது போல் விளையாட்டாக வீடியோ எடுக்க முயன்ற போது, உயிருக்கே ஆபத்தாக முடிந்துபோன வீடியோ தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிக்டாக் செயலியில் பலர் விநோதமாகவும், வித்தியாசமாவும் பல விஷயங்களை செய்து வருகின்றனர். இது தற்போது ஒரு போதையாக மாறுவருகிறது. மேலும் டிக் டாக்கால் பல உயிரிழப்புகளும் நடந்துள்ளன.

இந்நிலையில் ஒரு இளம்பெண், டிக்டாக் வீடியோவிற்காக விளையாட்டாக தூக்கு மாட்டி கொள்வது போல் முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த கயிறு, அந்த பெண்ணின் கழுத்தில் மாட்டிக்கொண்டதால் உயிர் பிழைக்க பல வினாடிகள் போராடியுள்ளார்,

அதன் பின்பு அந்த இளம்பெண்ணின் பெற்றோர், விரைந்து வந்து அவரை விடுவித்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி, காண்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதக்கண்ட பலரும் அந்த இளம்பெண்ணை சரமாரியாக கேள்விகேட்டு, அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.  இதில் மேலும் படிக்கவும் :