செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 8 ஜூலை 2019 (12:13 IST)

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு தடை!!

நேபாளத்தில் திபெத் தலைவர் தலாய்லாமாவின் பிறந்தநாளை கொண்டாட அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் வசித்து வருபவர் தலாய்லாமா. இவர் கடந்த 1959-ல் சீன ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியை அடுத்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

1935-ல் பிறந்த அவருக்கு தற்போது 84 வயதாகிறது. இந்நிலையில் நேபாளத்தில் வசித்துவரும் திபெத்தியர்கள் தங்களது தலைவரின் பிறந்த நாளை ஸ்வயம்பூநாத் பகுதியில் உள்ள முஸ்டங்கும்பா என்ற இடத்தில் கொண்டாட முடிவு செய்தனர்.

இது குறித்து நேபாள உள்துறை அமைச்சகம் கூறுகையில், திபெத்தியர்கள் தங்கள் வீடுகளில் தாராளமாக தலாய் லாமாவின் பிறந்த நாளை கொண்டாடலாம் என்றும், பொது இடங்களில் மட்டுமே தடை விதிக்கப் பட்டுள்ளது எனவும் கூறினார்.

மேலும் திபேத் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள சீனா, தற்போது நேபாளத்திற்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.