செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 8 ஜூலை 2019 (17:13 IST)

மும்பையில் மழையால் ஏற்பட்ட வெள்ளம்... பள்ளத்தில் சிக்கிய பைக்..வைரல் வீடியோ

மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வந்ததால் பல பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை முதல்  தொடர்ந்து  இரவு, பகலாக விடாமல் பெய்து வந்த மழையால், மகாராஷ்டிரா மாநிலத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் கூட மழையால் சாலையில் ஏற்பட்ட வெள்ளத்தால் குழந்தைகள், பெண்கள், என ஒட்டுமொத்த மக்களும் பலத்த சிரமத்துக்குள்ளாயினர். 
 
இந்நிலையில் இன்றும் தொடர்ந்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.அப்போது எல்.பி.எஸ் சாலையில் ஒருவர் வாகனத்தை தள்ளிக்கொண்டு செல்லும் போது, சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் அவரது வாகனம் மூழ்கியது. பின்னர் அவருடன் சேர்ந்தி சிலர் மூழ்கிய வானத்தை சிரமத்துக்கு இடையில் மீட்டனர். இந்த வீடியோ வைரலாகிவருகிறது.