வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 7 ஜூலை 2019 (12:55 IST)

முகிலனை நாய் கடித்துள்ளது : சிபிசிஐடி அதிர்ச்சி தகவல்

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவா்கள் மீது காவல் துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூடு தொடா்பாக சமூக செயல்பாட்டாளா் முகிலன் ஆவணப்படம் வெளியிட்டார். இந்த சம்பவத்தை அடுத்து அவரை காணவில்லை. அவா் கடத்தப்பட்டிருக்கலாம் என்று பல்வேறு பகுதிகளிலும் உறவினா்கள், நண்பா்கள் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேல் அவரை தேடி வந்தனர். 
ஆனால் முகிலின் முகவரி இன்றி தொலைந்துவிட்டார். இதனால் மதுரையைச் சேர்ந்த மனித உரிமை செயல்பாட்டாளர் ஹென்றி டிஃபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முகிலனை தமிழக காவல்துறை கண்டறியவேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். பின்னர் காணாமல் போனதாக கூறப்பட்டுவந்த முகிலனை கண்டுபிடிப்பது தொடா்பான வழக்கை  சிபிசிஐடி காவல் துறையினா் விசாரித்து வந்தனர். 
 
இந்த நிலையில் காணாமல் போனதாக போலீசாரால் தேடப்பட்டு வந்த முகிலனை திருப்பதியில் பார்த்ததாக அவரது நண்பர் சண்முகம், முகிலனின் மனைவியிடம் தெரிவித்ததையடுத்து திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலனை ஆந்திர காவல்துறையினர் கொண்டுசெல்லும் காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
தாடியுடன் ஆல் அடையாளம் இன்றி முற்றிலும் மாறுபட்டுள்ள முகிலனை  ஆந்திர காவல் துறையினர் திருப்பதி ரயில்நிலையத்தில் இருந்து கொண்டுசெல்லப்படுவது போன்ற இந்த காணொளியில், முகிலன் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பினார். தற்போது தமிழக சிபிசிஐடி போலீஸார் முகிலனை மீட்டு சென்னை எழுப்பூரில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துவந்து விசாரித்து வருகின்றனர்.
 
அதில், ஒருவாரத்திற்கு முன்  நாய் கடித்ததாக மருத்துவர்களிடம் முகிலன் கூறியதாகவும் சிபிசிஐடி  போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். அடுக்கம்பாறை மருத்துவமனையில் முகிலனை பரிசோதித்த போது நாய் கடித்ததற்கான காயம் இருந்தது கண்டுபிடித்த நிலையில்,   நாய் கடிக்கு ஊசி போடப்பட்டதாகவும், சாப்பிடாததால் முகிலன் உடல் பலகீனமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
 
மேலும், முகிலனின் வாக்குமூலத்தை வீடியோ மூலம் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருவகின்றன.