1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 22 நவம்பர் 2022 (18:28 IST)

மெட்ராஸ் ஐ வராமல் தடுக்க முடியுமா?

madras eye
ஒருவருக்கு மேல் மெட்ராஸ் ஐ  வராமல் தடுக்க முடியாது என்றும் ஆனால் மெட்ராஸ் வந்து விட்டால் அது தீவிரம் ஆகாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட பல நகரங்களில் மெட்ராஸ் ஐ நோய் பரவி வருகிறது. இந்த நிலையில் மெட்ராஸ் ஐ வராமல் தடுக்க வாய்ப்பே இல்லை என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது என்றும் ஆனால் மெட்ராஸ் ஐ வந்து விட்டால் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் 
 
மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் தொற்று நோய் பாதிக்கப்பட்ட நபர் பொது இடங்களுக்கு செல்லாமல் இருந்தாலே இந்த நோய் பரவாது 
 
அதேபோல் மெட்ராஸ் ஐ வராமல் தடுக்க மருந்து உட்கொள்ளலாமா என்று சிலர் கேட்பார்கள் அதற்கு அவசியமே இல்லை.   மெட்ராஸ் ஐ வந்ததற்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் மருத்துவர்களை அணுகுவது தான் புத்திசாலித்தனம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர் 
 
மெட்ராஸ் ஐ அறிகுறி தென்பட்டால் மருத்துவரை அணுகி அவர் தரும் மருந்தை மட்டும் உபயோகிக்க வேண்டும் என்றும் பாட்டி வைத்தியம் என்ற ரிஸ்க்கை மெட்ராஸ் ஐ விஷயத்தில் இருக்கக் கூடாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
 
Edited by Siva