1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 22 நவம்பர் 2022 (18:13 IST)

இந்திய எல்லையை நோக்கி வந்த பாகிஸ்தானியர் சுட்டு கொலை: ராணுவம் அறிவிப்பு

army
இந்திய எல்லையை நோக்கி வந்த பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஊடுருவ முயன்ற தாகவும் அவருக்கு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது 
 
இன்று அதிகாலை இரண்டு இரண்டரை மணியளவில் இந்த சம்பவம் நடந்து கொள்வதாகவும் சர்வதேச எல்லை வழியாக பாகிஸ்தானிலிருந்து ஊடுருவ முயற்சித்த நபரை எச்சரித்தும் அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் அவர் எல்லையை நோக்கி வந்ததால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது 
 
இந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் யார் என்பது குறித்த விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
Edited by Mahendran