வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Siva
Last Updated : செவ்வாய், 22 நவம்பர் 2022 (18:21 IST)

நாளை கார்த்திகை அமாவாசை.. விரதமிருந்தால் என்ன பலன்கள்!

Amavasai
கார்த்திகை மாத பௌர்ணமி எந்த அளவிற்கு முக்கியமானதோ அதே போல் கார்த்திகை மாத அமாவாசையும் பல்வேறு சிறப்புகளை கொண்டது என முன்னோர்கள் தெரிவித்துள்ளனர் 
 
கார்த்திகை மாத அமாவாசை தினத்தில்தான் பாற்கடலிலிருந்து இலட்சுமி தேவி அவதாரம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் நாளை கார்த்திகை அமாவாசை தினம் வருவதை அடுத்து ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் அதிகாலை நேரத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்
 
மேலும் கார்த்திகை அமாவாசை தினத்தில் ஆறு குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் புனித நீராடினால் கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்க
 
 மேலும் பசு காகம் ஆகியவற்றுக்க்கு உணவளித்த பின்னர் ஆதரவற்ற மக்களுக்கு அன்னதானம் செய்தால் கோடி மடங்கு புண்ணியம் பெருகும் என்பதும் கார்த்திகை அமாவாசை தினங்களில் விரதம் இருந்து அரசமரத்தை சுற்றி வழிபட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர் முற்றுபுள்ளி
 
Edited by Siva