திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 19 ஜூன் 2018 (10:03 IST)

பிரபல பாடகர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகர் மற்றும் பாடலாசிரியர் டுவெய்ன் ஆன்ஃபிராய் (20). இவர் எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்.டெண்டாசியான்  என அழைக்கப்படுகிறார். இவர் பல புரட்சிகர பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக இவர் பாடியுள்ள லுக் அட் மீ என்ற பாடல் மிகவும் வைரலானது.
இந்நிலையில் டுவெய்ன் பிளோரிடாவில் உள்ள டீர்பீல்ட் கடற்கரைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்த மர்ம நபர் ஒருவர், டுவெய்னை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
 
துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்துள்ள அப்பகுதி போலீஸார் கொலைக் குற்றவாளியை தேடி வருகின்றனர்.