புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : வெள்ளி, 11 அக்டோபர் 2019 (16:44 IST)

சாலையில் ’ஹேண்ட் பேக்கை சுமந்து சென்ற நாய் ’ : வைரலாகும் வீடியோ

பல நாடுகளில்  மனிதர்களின் செல்லப்பிராணியாக சில விலங்குகள்  வளர்க்கப்படுகின்றன. அவற்றில் குறிப்பாக நாய்கள் தான் பல்வேறு நாடுகளில் அதிக மக்களால்  விரும்பி வளர்க்கப்படுகிறது. இந்நிலையில் மலேசியாவில்  நாய் ஒன்று  இளம்பெண்ன் ஒருவரின் 'ஹேண்ட் பேக்'கை சுமந்து செல்லும் காட்சி வைரலாகிவருகிறது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஒரு இளம் பெண் ஒரு கடையைவிட்டு வெளியே செல்கிறார். அப்பொழுது அவரைப் பின் தொடர்ந்து சென்ற அவரது வளர்ப்பு நாய், அவரது ஹேண்ட் பேக்கை தன் வாயில் கவ்விக் கொண்டு சென்றது.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 
 
தற்போது வரை, இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்து, லைக் மற்றும் ஷேர் செய்து வருகின்றனர்.