திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : வெள்ளி, 11 அக்டோபர் 2019 (14:59 IST)

2019 - உலக அமைதிக்கான நோபல் பரிசு : எத்தியோப்பிய அதிபருக்கு அறிவிப்பு !

உலகில் உள்ள 6 முக்கியத்துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு வருடம்தோறும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நோபல் என்பவரின் நினைவாக நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இவ்வாண்டுக்கான  அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இந்த ஆண்டுக்கான மருத்துதுறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு வழங்கப்படுவதக நோபல் கமிட்டிக்குழு அறிவித்துள்ளது.
 
போலாந்தை சேர்ந்த எழுத்தாளர் ஓல்கா டோகார்ஸுக் மற்றும் ஆஸ்திரியாவின் பீட்டர் ஹேண்ட்கே ஆகியோருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ரீசார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் அயன் பேட்டரிகளை உருவாக்கியதற்காக 96 வயது விஞ்ஞானி ஜான் பி குட் எனாஃப் உட்பட மூவருக்கு 2019-ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இன்று, 2019 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது