வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 4 ஜூன் 2019 (18:13 IST)

மூன்று பேர் உடலுறவு ...போதையில் இறந்த மாடல் அழகி : பகீர் தகவல்

மலேசியாவில் ஒரு மாடல் அழகி இவானா ஸ்மித் அண்மையில் மரணமடைந்தார்.இதுகுறித்து கோடீஸ்வரர் ஒருவர்’ தனக்கும், ஸ்மித்தின் மரணத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனபது நிரூபனமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம் டச்சு மாடல் அழகி இவானா ஸ்மித் என்பவர் மர்மமான முறையில் கோலாலம்பூரில் உள்ள ஆடம்பர குடியிருப்பில் உள்ள 14வது மாடியில் பால்கணியில் இருந்து விழுந்து கீழே 6வது மாடியில் இறந்துகிடந்தார்.
 
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் இது கொலை என்ற சந்தேகத்தின் பேரில் கோடீஸ்வரர் அலெக்ஸ் ஜான்சன், அவரது மனைவி லூனா ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த செய்தி அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் இவானாவின் மரணம் குறித்து இருவர் மீது எந்தக் குற்றச்சாட்டுகளும்  நீருபிக்க முடியாததால் தற்போது இருவரும் இக்கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
 
இந்தக் கொலை நடந்து இதுவரை 19 மாதங்கள் ஆகிவிட்டதால் தற்போது விடுதலையான ஜான்சன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில்  நானும், என் மனைவியும் இவானாவுடன் உடல் உறவு கொண்டோம்.ஆனால் இவானாவை நாங்கள் கொலை செய்யவில்லை. இக்கொலைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்தார்.
 
இவானா மர்மமான முறையில் இறந்ததை அடுத்து அவரது உடலை போலீஸார் பிரேத பரிசொதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை  முடியில் அவர் அதிகமாக மது குடித்ததும் , கொகைன் என்ற போதைப்பொருளை அதிகமாக உட்கொண்டதும்தான் அவரது இறப்புக்கான காரணன் என்று தகவல் வெளியானதை அடுத்து ஜான்சன், லூனா ஆகிய இருவரும்   இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.