திங்கள், 31 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 31 மார்ச் 2025 (12:45 IST)

எங்ககிட்டயும் ஏவுகணைகள் இருக்கு.. போட்டு பாத்துடுவோம்! - அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

Trump

அணு ஆயுத பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் சம்மதிக்காவிட்டால் தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்கா விடுத்த மிரட்டலுக்கு ஈரான் பதில் மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வளைகுடா நாடான ஈரான் ரகசிய அணு ஆயுத சோதனைகள் மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது. இதுகுறித்து ஈரான் தங்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியிருந்த நிலையில், அதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிபர் ட்ரம்ப் “ஈரான் எங்களுடன் ஒப்பந்தம் செய்யவில்லை என்றால் குண்டு வீசி தாக்குவோம். அவர்கள் இதற்கு முன்பு கண்டிராத வகையில் இந்த தாக்குதல் இருக்கும்” என எச்சரிக்கை விடுத்தார்.
 

 

இந்நிலையில் தற்போது ஈரான் தனது செயல்பாடுகள் மூலம் அமெரிக்காவை எச்சரிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஈராக் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரானின் குறிவைத்து தாக்கும் ஏவுகணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் வான்வழி தாக்குதலை முறியடிக்கும் அமைப்பையும் ஈரான் முடுக்கியுள்ளது.

 

இந்த ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா - ஈரான் இடையே போர் மூளும் அபாயம் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K