புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : வெள்ளி, 11 அக்டோபர் 2019 (16:19 IST)

கார்கள் மீது மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து : பதறவைக்கும் சம்பவம் ! பரவலாகும் வீடியோ

சீனா தேசத்தில் ஜியாங்கு மாகாணத்தில் சுக்சி என்ற நகர் உள்ளது. இங்குள்ள  மேம்பாலத்தில் நேற்று இரவு 2 கார்கள் சென்றுகொண்டிருந்தன. அப்பொது மேம்பாலம் திடீரென விழுந்தது. இதில் 2 கார்கள் பலத்த சேதம் அடைந்தன.  இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் , அந்த மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த 2 லாரிகள்  மற்றும் 3 கார்கள் கீழே விழுந்து சேதமடைந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு விரைந்து சென்ற அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
 
இந்த பயங்கர விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.
 
இந்த விபத்து குறித்து  ஜியாங்கு மாகாணத்தைச் சேர்ந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.