வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 10 ஜூலை 2019 (13:38 IST)

டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் இருக்கும் செல்லப்பிராணிகளின் ‘இன்விசிபிள் சேலஞ்ச்”!!.

டிவிட்டரில் கிகி சேலஞ்ச், பாட்டில் கேப் சேலஞ்ச் ஆகியவைகளை தொடர்ந்து, தற்போது செல்லப்பிராணிகளின் இன்விசிபிள் சேலஞ்ச் ஒன்று ட்ரெண்டிங்கில் உள்ளது.

இணையத்தில், செல்லப்பிராணிகளான பூனை. நாய் அகியவற்றின் குறும்பான சேட்டைகள், பெரும்பாலான இணைய வாசிகளால் ரசிக்கப்படுகிறது. அந்த வரிசையில் தற்போது பூனைகள் மற்றும் நாய்கள் செய்யும் ‘இன்விசிபிள் சேலஞ்ச்” ஒன்று டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

அதென்ன இன்விசிபிள் சேலஞ்ச்???

ட்ரான்ஸ்பரண்ட்டான, அதாவது ஊடுருவக்கூடிய கண்ணாடிக் காகிதத்தால், வீட்டிற்குள் உள்ள நடைபாதையை மறைத்து வைத்துவிடுவார்கள். அதன் பிறகு அவர்களின் செல்லப்பிராணியான நாயையோ அல்லது பூனையையோ அழைப்பார்கள். அப்போது அவர்களின் செல்லப்பிராணி அந்த கண்ணாடிக் காகிதத்தை தாண்டி குதித்து வரவேண்டும். இது தான் இன்விசிபிள் சேலஞ்ச்.

தங்களது செல்லபிராணிகள், ஊடுருவக்கூடிய கண்ணாடி காகிதத்திற்க்கும், நிஜத்திற்க்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்கின்றனவா என்பதை கண்டறியவே இதை உருவாக்கினர்கள் என்று கூறப்படுகிறது.

தற்போது இந்த சேலஞ்ச், டிவிட்டரிலும், இன்ஸ்டாகிராமிலும் பெரும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.