ஒரு கையில் குழந்தையை தூக்கிவைத்து.. பதவிப் பிரமாணம் செய்து வைத்த நீதிபதி ! வைரல் வீடியோ
அமெரிக்கா நாட்டில், வழக்கறிஞர் படிப்பு முடித்த ஒரு பெண் வழக்கறிஞர் பதவி ஏற்கும்போது, அவருக்கு நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.அப்போது அப்பெண்ணிடம் இருந்த குழந்தையைக் வாங்கி கையில் வைத்துக்கொண்டே நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அமெரிக்கா நாட்டில் டென்னிஸி மாகாண நீதிமன்றத்தி நீதிபதி ரிச்சர்ட் டிக்கன்ஸ். இவர் சமீபத்தில், ஜூலியானா லாமர் என்ற வழக்கறிஞர் படிப்பு முடித்து, பதவிப் பிரமாணம் செய்ய நீதிமன்றத்துக்கு வந்தார். அப்போது, அவரது கையில் தனது கைகுழந்தையை தூக்கி வந்திருந்தார்.
அதைப்பார்த்த நீதிபதி டிக்கன்ஸ்,ஜூலியானா லாமரின் குழந்தையை தனது கையில் வைத்துக்கொண்டே அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த சம்பவம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.