1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 15 ஜனவரி 2023 (11:03 IST)

சீனாவில் கொரொனா தொற்றால் 90 கோடி பேர் பாதிப்பு? அதிர்ச்சி தகவல்

சீனாவில் இருந்து கொரொனா முதல் அலை பரவியது மாதிரி தற்போது பிஎஃப்-7 என்ற உருமாறிய வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வேகமாகப் பரவி வருகிறது.

சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இத்தொற்று பரவி வருகிறது.

இந்த நிலையில் சீனாவில் 90 கோடி பேருக்கு கொரொனா தொற்று பாதித்துள்ளதாகவும்,  இதில், இறந்தவர்களின் உடல்கள் திறந்த வெளியில் பாதுகாப்பின்றி எரிக்கப்பட்டுவருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் அங்கு கட்டுப்பாடுகள் தளர்வளிக்கப்பட்டதால், தொற்றுப்பரவல் அதிகரித்துள்ளதாகவும், பலர் இங்கிருந்து வெளியேறி வருவதாகவும் கூறப்படுகிறது.

அதிக மக்கள் தொகையில் முதலிடம்( 141 கோடி) வகிக்கும் சீனாவில் 90 கோடி பேருக்கு தொற்று உள்ளதாக தகவல் வெளியாகும் நிலையில், இதில் 1 கோடிப் பேர் ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பின் மீண்டும் தொற்றால் பாதிக்கபட்டுள்ளனர்.

இது உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.