ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 13 ஜனவரி 2023 (22:31 IST)

இங்கிலாந்து மன்னர் மீது முட்டை வீசிய நபருக்கு அபராதம்!

engalnd
பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் மீது ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் முட்டை வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்  அந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு இங்கிலாந்து நாட்டின் மன்னர் சார்லஸ். இவர், சமீபத்தில் லண்டன் அருகில் உள்ள ஒரு நகரத்திற்கு சென்றபோது அவர் மீது மர்ம நபர் ஒருவரால் முட்டை வீசப்பட்டது.

முட்டை வீசிய  ஹாரி என்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.  அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் 20 வயதுடைய இளைஞர் என்ற தகவல் வெளியானது.

அவர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த நிலையில்,அவருக்கு 100 பவுண்டுகள் அபராதமும் இந்த வழக்குக்கான செலவாக மேலும்  85 பவுண்டர்கள்  விதித்து நீபதி உத்தரவிட்டுள்ளார்.