திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 12 ஜனவரி 2023 (17:56 IST)

நீண்டதூரம் பயணம் செய்வோருக்கு முகக்கவசம் கட்டாயம்- உலக சுகாதார அமைப்பு

corono
கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து கொரொனா தொற்று  உலக நாடுகளுக்குப் பரவியது. இதனால் பல கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
 

இத்தொற்று கடந்த ஆண்டில் ஓரளவு குறைந்த  நிலையில், ஆண்டிறுதியில் மீண்டும் பரவத் தொடங்கியது.

குறிப்பாக சீனாவில் இ பிஎஃப்-7 என்ற உருமாறிய கொரோனா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளுக்குப் பரவி வருகிறது.

அமெரிக்காவில் கடந்த 7 ஆம் தேதி வரை 27.6% மக்கள் கொரொனாவில் எக்ஸ்பிபி 1.5 என்ற உருமாறிய வைரஸால் பாதித்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை அதிகரித்து வரும்   நிலையில், அண்டை நாடுகள், மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இத்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரொனா பாதிப்புகள் அதிமுள்ள  நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மற்றும் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள்  கட்டாயம் முக்கவசம் அணிய வேண்டுமென உலக சுகாதார அமைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.