திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 13 மே 2022 (09:03 IST)

ரஷ்யா - உக்ரைன் போர்: 60 லட்சம் பேர் அகதிகளாக தஞ்சம்!

ரஷ்யா போர் காரணமாக உக்ரைனில் இருந்து இதுவரை 60 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம். 
 
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் மக்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்று தஞ்சமடைந்துள்ளனர். 
 
இந்நிலையில் ரஷ்யா போர் காரணமாக உக்ரைனில் இருந்து இதுவரை 60 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த 60 லட்சம் பேரில் பெரும்பாலானவர்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துவிட்டனர். 
 
மேலும் இந்த 60 லட்சம் பேரில் 90 சதவிகிதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐ.நா. அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.