வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 11 மே 2022 (09:00 IST)

தவறுதலாக சொந்த நாட்டின் ராணுவத்தினர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய ரஷ்ய ராணுவம்

russia army
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த சில வாரங்களாக போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தவறுதலாக ரஷ்ய ராணுவத்தினர் தனது சொந்த நாட்டின் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
உக்ரைன் மீது கடந்த சில வாரங்களாக கொடூரமான தாக்குதலை ரஷ்ய ராணுவம் நடத்தி  வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான உக்ரைன் வீரர்கள் பலியாகியுள்ளதாகவும் லட்சக்கணக்கான உக்ரைன் நாட்டின் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இந்த நிலையில் ரஷ்ய ராணுவத்தினர் நேற்று நடத்திய தாக்குதலில் தங்களது சொந்த ராணுவத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் ரஷ்ய ராணுவ தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக ரஷ்ய இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது