1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. 52,98,207 people affected by corona worldwide

52,98,207 உலக அளவில் எகிறும் கொரோனா தொற்று!!

உலக சுகாதார மையம்
உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52,98,207 ஆக அதிகரிப்பு. 
 
உலக அளவில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்து வரும் நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52,98,207 ஆக அதிகரிப்பு. 
 
மேலும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 21,56,382 ஆக அதிகரிப்பு, உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,39,425 ஆக உயர்ந்துள்ளது என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 
 
அமெரிக்காவில் புதிதாக 28,175 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பு 16,44,000 கடந்துள்ளது.
 
பிரேசிலில் 17,500 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,30,000 தாண்டியது. 
 
ரஷ்யாவில் 3,26,000 பேரும், ஸ்பெயினில் 2,82,000 பேரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
Waiting List-ல் தயாநிதி மாறன்: ஆர்.எஸ்.பாரதி கைதை கொண்டாடும் எச் ராஜா!!