செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 21 மே 2020 (08:54 IST)

உலக அளவில் 50 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் இலட்சத்தில் உயர்ந்து வரும் நிலையில் சற்று முன் உலக சுகாதார அமைப்பு தெரிவித்த தகவலின்படி உலக அளவில் 50.84நாலு லட்சம் பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது
 
உலகின் 200 நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் தினந்தோறும் அதிகரித்து வருவதும் கொரோனாவால் உயிர் பலிகள் அதிகரித்து வருவதும் அனைத்து நாடுகளையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,085,521 ஆக உயர்ந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை 329,731ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக அளவில் 2,021,666 பேர்கள் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
கொரோனாவுக்கு அமெரிக்காவில் 1,591,991 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவில் 308,705 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரேசிலில் 293,357 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்பெயினில் 279,524 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்தில் 248,293 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தாலியில் 227,364 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.