1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 மே 2020 (14:55 IST)

இந்தியாகிட்ட தேவையில்லாம வம்பு பண்றாங்க! – சீனா மீது அமெரிக்கா புதிய குற்றச்சாட்டு!

கொரோனா வைரஸ் பரவலில் தொடர்ந்து சீனா மீது குற்றம் சாட்டி வரும் அமெரிக்கா தற்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளின் எல்லை பிரச்சினையில் சீனா தலையிடுவதாக குற்றம் சாட்டியுள்ளது.

கொரோனா பரவலுக்கு முன்னரே பொருளாதாரரீதியாக சீனா – அமெரிக்கா இடையே மோதல் இருந்து வந்தது. இந்நிலையில் சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானதற்கு சீனாவே காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் தற்போது புதிய குற்றச்சாட்டு ஒன்றையும் அமெரிக்க முன்வைத்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் ”சீனா தனது அண்டை நாடுகளான இந்தியா மற்றும் பிற நாடுகளிடம் ஆத்திரமூட்டும் வகையான ராணுவ அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது. இந்திய எல்லை பகுதியில் சீனா அத்துமீறுவதாக அஆசிய நாடுகளுக்கான அமெரிக்க மூத்த அதிகாரி ஆலீஸ் வேல்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது. அமெரிக்கா அரசு சீனா மீதுள்ள காழ்ப்புணர்ச்சியில் பேசுவதாகவும், சீனா மற்றும் அண்டை நாடுகளின் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது முட்டாள்தனமான செயல். பிரச்சினைகளை நாங்களே பேசி தீர்த்துக் கொள்வோம்” என்றும் கூறியுள்ளது.