தொடர்புடைய செய்திகள்
- ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!
- சென்னையில் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை: பெரும் பரபரப்பு
- தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.. இன்போசிஸ் நாராயணமூர்த்தி கருத்துக்கு கண்டனம்..!
- ஊழியர்களுக்கு, work from home வழங்க மறுக்கும் ஐடி நிறுவனங்கள்
- கூலி படத்துக்கு போட்டி போடும் முன்னணி நிறுவனங்கள்… இத்தனை கோடி ரூபாய் ஆஃபரா?
வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை.. 200 நிறுவனங்கள் ஒப்புதல்.!
வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை என்பது உலகம் முழுவதும் பல நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் இங்கிலாந்து நாட்டில் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற நடைமுறையை அந்நாட்டில் உள்ள 200 நிறுவனங்கள் கடைபிடிக்க உள்ளன.
வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை என்பது பணியாளர்களுக்கு சோர்வை ஏற்படுத்தி வருவதாகவும் எனவே நான்கு நாட்கள் மட்டுமே வேலை பார்க்கும் திட்டத்தை அமல்படுத்த உள்ளதாகவும் இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
சோதனை முயற்சியாக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டபோது 100 நிறுவனங்கள் அதற்கு ஒப்புதல் அளித்தன. இந்த திட்டத்தால் சம்பளம், சலுகை எதுவும் குறைக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. 100 நிறுவனங்கள் நடத்திய சோதனையை முயற்சியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது 200 நிறுவனங்கள் வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலையை நிரந்தரமாக நடைபெற நடைமுறைப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 200 நிறுவனங்களில் பணிபுரியும் 5000 ஊழியர்கள் இனி திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே பணிபுரிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் நிறைவுடன் இருப்பார்கள் என்றும் வேலை செய்யும் நான்கு நாட்களிலும் அவர்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.
Edited by Siva
