1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 8 ஜனவரி 2025 (14:06 IST)

சென்னையில் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை: பெரும் பரபரப்பு

income tax raid
சென்னையில் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரியைத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.  

பூந்தமல்லியை அடுத்த சாத்தங்காடு என்ற பகுதியில் உள்ள தனியார் மெட்டல் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதேபோல், சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்திலும் வருமானவரி சோதனை நடைபெறுகிறது.

மேலும், பூக்கடை திருவொற்றியூர், சாத்தங்காடு, தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கட்டுமான மற்றும் மெட்டல் நிறுவனங்களுக்கு சொந்தமான ஆறு இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 ஏற்கனவே, எடப்பாடி பழனிச்சாமி உறவினர் ராமலிங்கம் என்பவரது நிறுவனத்தில் நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில், இன்று சென்னையில் உள்ள ஆறு இடங்களில் சோதனை செய்வதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran