திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (19:11 IST)

220 காதல் தோல்விகளால் மனம் உடைந்த மாடல் அழகி , நாயுடன் திருமணம் !

இங்கிலாந்து நாட்டின் கிழக்கு எஸ்கர்ட் பகுதியில் வசித்து வருபவர்  எலிசபெத் ஹோட். இவர் அந்நாட்டின் பிரபல மாடல் அழகி ஆவார். தற்போது அவருக்கு 19 வயது ஆகிறது. இந்நிலையில் சமீபத்தில் அவர் நாயை திருமணம் செய்துகொள்ளபோவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவர் சொன்னது போலவே சமீபத்தில் தான் வளர்க்கும் நாயை திருமணம் செய்து கொண்டு அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.
 
இதற்கான காரணம் தான் இதைவிட அனைவருக்கும்,  ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் 4 முறை திருமண நிச்சயதார்தம் வரைக்கும் சென்று, திருமணம் நடைபெறாமலே போனது. அதுமட்டுமல்லாமல் இதுவரை இவர் 220 ஆண்களை காதலித்தும் அந்த காதலில் ஒன்றிலும் கூட வெற்றிபெறவில்லை. இதனால் விரக்தி அடைந்த எலிசபெத் சமீபத்தில் ஒரு நாயை திருமண செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார். அவர் சொன்னபடியே நாயை திருமணம்செய்யும் ஏற்பாடுகள்  ஒரு தொலைக்காட்சியின் சார்பில் செய்யப்பட்டது. இதைப் பார்க்க பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.