மருத்துவர்கள் அனுமதியளித்தால் தற்கொலை செய்து கொள்ளலாம்: ஒப்புதல் அளித்த மாகாண அரசு
அமெரிக்கவில் ஒரு மாகாணத்தில், மருத்துவர்கள் அனுமதியுடன் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற புதிய சட்டத்திற்கு அம்மாகாண அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அமெரிக்காவில், நோய் வாய்ப்பட்டவர்கள், மருத்துவர்களின் அனுமதியின்றி தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற சட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாண செனட் சபையில் அம்மாகாண அரசு வினோத சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது. அதாவது தீராத நோயால் தவித்து கொண்டிருக்கும் நோயாளிகள், மருத்துவர்கள் எழுதிகொடுக்கும் மருந்துகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என அந்த சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவர்கள் தற்கொலைக்கான மருந்துகளை கொடுப்பதற்கு முன்பு, நோயாளிகள் நல்ல மனநிலையில் இருப்பதை உறுதி செய்யவேண்டும் எனவும் அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் கருணை கொலை குறித்து பல விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், நியூ ஜெர்ஸியில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்ட மசோதா பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.