புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (15:47 IST)

கண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை போடும் சிறுமி : வைரல் வீடியோ

உக்ரைன் நாட்டில், கண்களை மூடிக்கொண்டு ஒரு சிறுமி சண்டைப் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிவருகிறது.
உக்ரைன் நாட்டிம் ஹார்கிவ் என்ற பகுதியில் வசிப்பவர்  கிரா மகோகோனேன்கோ.  வயது 11 தான் ஆகிறது. இவருக்கு குத்துச்சண்டையில் ஈடுபட ஆசை அதிகம். அதனால் நாள் தோறும் பள்ளிக்குச் சென்று  வந்த பிறகும், விடுமுறை நாட்களிலும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.
 
இந்நிலையில் தனது திறனை அதிகரிக்க விரும்பிய மகோகோனேன்கோ, தனது கண்களைக் கட்டிக்கொண்டு குத்துச்சண்டைப் பயிற்சி செய்து வருகிறார். 
 
இவ்விதம் மகள் கண்ணைக்கட்டிக்கொண்டு பயிற்சியில் ஈடுபடுவதைப் பார்த்த அவரது தந்தை இதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.தற்போது இந்த வீடியோ வைரலாகிவருகிறது.