புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 15 மார்ச் 2019 (13:26 IST)

லாட்ஜில் மாடல் அழகி செய்த வேலை: குளியலறையில் சிக்கிக்கொண்ட இளைஞர்!!!

மாடல் அழகி ஒருவர் இளைஞரை குளியலறையில் வைத்து பூட்டிவிட்டு அவரது காரை திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை சேர்ந்தவர் சக்திவேல் (39). இவருக்குத் திருமணமாகி, மனைவி மற்றும் 3 வயதில் மகன் உள்ளனர். சக்திவேல் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
 
இந்நிலையில் சக்திவேலிற்கு சீனு என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சக்திவேல் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி சீனுவிடம் பணம் வாங்கியுள்ளார். ஆனால் சொன்னபடி வேலை வாங்கித்தரவில்லை. கொடுத்த காசை திரும்பி தரும்படி சீனு கேட்டதற்கு சக்திவேல் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
 
இதனால் சீனு தஞ்சையைச் சேர்ந்த சுவேதா (26) என்ற மாடல் அழகியை சக்திவேலிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். 
 
இந்நிலையில் சக்திவேல் சுவேதாவை தனது காரில் அழைத்துக்கொண்டு ஏலகிரிக்கு சென்றார். அங்கு இருவரும் ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். சக்திவேல் குளிப்பதற்காக குளியலறைக்கு சென்றார். அப்போது சுவேதா, சக்திவேலின் கார் சாவியை எடுத்துக்கொண்டு குளியலறையின் கதவை பூட்டிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆனார்.
 
இதையடுத்து சக்திவேல் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, லாட்ஜிற்கு வந்த போலீஸார் குளியலறையில் இருந்த சக்திவேலை மீட்டனர். அந்நேரம் சக்திவேலின் செல்போனிற்கு ஒரு மெசேஜ் வந்தது. சக்திவேலின் போனை போலீஸார் வாங்கி பார்த்தனர். அதில் ஸ்வேதா உன் காரை எடுத்து சென்றுள்ளேன். சீனுவிற்கு கொடுக்க வேண்டிய 2 லட்சத்தை தந்துவிட்டு காரை வாங்க்கொள் என மெசேஜ் அனுப்பியிருந்தார். இதையடுத்து போலீஸார் மாடல் அழகியான சுவேதா மற்றும் சீனுவை தேடிவருகிறார்கள்.