வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (17:34 IST)

கற்பைக் காக்க போராடிய பெண்.. ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்...

அமெரிக்காவில் ஒரு பெண்ணை ,ஒரு கொடூரன் பலவந்தமாக கற்பழிக்க முயன்றுள்ளான், அவனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள துப்பாக்கியால் அந்த நபரை சுட்ட அப்பெண்ணுக்கு அமெரிக்க நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.  இதுநாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பல்வேறு சட்டப்போராட்டத்திற்கு பின்னர் அப்பெண்  அடுத்த மாதம் விடுதலை ஆகவுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.
அமெரிக்கா நாட்டில் டென்னிசி என்ற  பகுதியில் வசித்துவந்தவர் சிண்டோயா பிரவுன் (16). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தார். இவர் சிறுவயதிலேயே நண்பர் ஒருவரால் கூட்டு பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளார். இதுகுறித்து வழக்கு ஏற்கனவே கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
 
இந்நிலைய்ல் சமீபத்தில் பிரவுன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அங்குவந்த ஜான் ஆலன் என்பவர் சிறுமியை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரவுன் அவனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்க்காக அங்கிருந்த துப்பாக்கியை எடுத்து ஆலனை சுட்டார் இதில் அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். பின்னர் தானே காவல்நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறி சரணடைந்தார். இதுகுறித்து வழக்கு நடைபெற்று வந்த நிலையில் அமெரிக்கா கோர்ட் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்தது. அந்நாட்டு வழக்கப்படி ஆயுள்தண்டனை என்பது 51 வருடங்கள் ஆகும். இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகள் சிறை தண்டணை அனுபவித்த பிரவுனை நீதிமன்றம் விடுதலை அளிப்பதாகத் தெரிவித்துள்ளது
 
பிரவுனின் விடுதலைக்கான அமெரிக்க மக்கள் மற்றும் திரை பிரபலங்கள் எனப்பலரும் போராடியதற்கு பலனாகவே நிபந்தனையுடன் பிரவுனை நீதிமன்றம் விடுவித்துள்ளது. இந்த நிபந்தனைகளை ஒப்புக்கொண்ட பிறகே பிரவுக்கு நீதிமன்றம் விடுதலை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.