1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 7 மார்ச் 2022 (23:55 IST)

போரில் 11,000 வீரர்கள் உயிரிழப்பு- உக்ரைன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கடந்த மாதம் 24 ஆம் தேதி ரஷ்ய அதிபர் புதின் உத்தரவில் ரஷ்ய படைகள் உக்ரைன் மீது போர் தொடுத்தது.

இது உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  சிறிய நாடாக உக்ரைனுக்கு  நேட்டோ நாடுகளும், மேற்கத்திய நாடுகள் உதவின. இதற்கு ரஷ்யா எதிர்ப்புத் தெரிவித்த  நிலையில்,  நேற்று மனிதாபிமானத்தின் அடிப்படையில் போரை நிறுத்துவதாக ரஷ்ய அதிபர் அறிவித்தார்.

இந்நிலையில் உக்ரைன் –ரஷ்யா இடையேயான போரில்  இதுவரை சுமார் 11 ஆயிரம்  ரஷ்ய வீரர்கள் மரணம் அடைந்துள்ளதாக உக்ரைன் வெளிவிவகாரம் அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், 46 விமானங்கள், 68 பீரங்கிகளை ரஷ்யா இழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.