இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டு பயணி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பல பகுதிகளில் கடந்த சில காலமாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அன்றாடம் நடந்து வரும் நிலையில், இந்த வன்கொடுமை சம்பவங்களில் வெளிநாட்டு பயணிகளும் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த ஒரு இளம்பெண் சமீபத்தில் இந்தியாவை சுற்றி பார்ப்பதற்காக வந்துள்ளார். மகாராஷ்டிராவில் வந்து இறங்கிய அவர் உதவிக்காக தன்னுடன் இன்ஸ்டாகிராமில் பழக்கத்தில் இருந்த கைலாஷ் என்ற நபரை அழைத்துள்ளார். கைலாஷ் அவரை புறப்படு டெல்லிக்கு வரும்படி சொல்ல, இளம்பெண்ணும் அங்கு சென்றுள்ளார்.
அங்கு ஒரு ஓட்டலில் இளம்பெண் தங்கியிருந்த நிலையில் தனது நண்பர்களுடன் அங்கு சென்ற அகிலாஷ் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் கைலாஷை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து இங்கிலாந்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K