வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 7 மார்ச் 2022 (17:37 IST)

ஆண்களுக்குக் கட்டாய குடும்ப கட்டுப்பாடு ..அதிர்ச்சி சம்பவம்

டார்கெட் முடிப்பதற்காக ஆண்களுக்குக் கட்டாய குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திக்குளம் அருகே வேம்பர் பகுதியைச்                சேர்ந்த மதுவிற்கு அடிமையானவர்களை வலுகட்டாயமாக அழைத்துச் சென்று குடும்பக்கட்டுப்பாடு செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

விளாத்திக்குளம் அருகே முத்துச்சேர்மன் என்பவை அதே ஊரைச் சேர்ந்த சூறாவளி என்ற நபர் வேலைக்கு அழைத்துச் செல்வதாகக் கூட்டிச்சென்று ஆரம்ப சுகாதார நிலையயத்தில் சாயல்குடி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று குடும்பகட்டுப்பாடு செய்துவிட்டு ரூ.1100 காசோலையைக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.