விக்ரமின்' துருவ நட்சத்திரம்' படத்தின் முக்கிய அப்டேட்
விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில் இந்த படத்தை முடிக்க விக்ரம் ஒத்துழைக்கவில்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தை முடித்துக் கொடுக்கவும் இந்த படத்தின் டப்பிங் பணியை பேசவும் விக்ரம் ஒப்புக்கொண்டதாகவும் இதற்காக மூன்று நாள் அவர் ஒதுக்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் துருவம் நட்சத்திரம் படத்தின் டப்பிங் பணிகள் நாளை முதல் ஆரம்பமவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
இதனை அடுத்து நீண்டகாலமாக கிடப்பில் இருக்கும் துருவநட்சத்திரம் திரைப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி விடும் என்று கூறப்படுவதால் விக்ரம் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் .