வியாழன், 13 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 13 மார்ச் 2025 (14:23 IST)

ரூபாய்க்கு புதிய இலச்சினை..! எல்லார்க்கும் எல்லாம்! - தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை Highlights!

Tamilnadu Budget

நாளை தமிழ்நாடு ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் புதிய இலச்சினையோடு தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

 

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்து 5 ஆண்டுகள் முடிய உள்ள நிலையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நாளை பட்ஜெட் தாக்கலை 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்வதன் மூலமாகவே அதில் பல சிறப்பான அறிவிப்புகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்புகள் எழத் தொடங்கிவிட்டன.

 

இந்நிலையில்தான் இன்று தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற வாக்கியத்துடன் கூடிய புதிய இலச்சினையை வெளியிட்டுள்ளனர். பொதுவாக இந்திய ரூபாய் மதிப்பிற்கு பயன்படுத்தப்படும் ₹ என்ற கூறியீட்டிற்கு பதிலாக ரூ என்றே குறிக்கப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. அதேசமயம் தமிழகத்தின் தனி இலச்சினை ஒன்றியத்திலிருந்து தொடர்ந்து தங்களை பிரித்துக் காட்டும் முயற்சியாக இருப்பதாகவும் பேச்சுகள் எழுந்துள்ளது.

 

மேலும்  2023-24ம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.27.22 லட்சம் கோடி எனவும், அதன்படி பொருளாதார வளர்ச்சி 8.23 சதவீதமாக உள்ளது எனவும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K