திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (19:39 IST)

11 ஏவுகணைகளை அடுத்தடுத்து வீசிய சீனா: தைவான் கடல் போர் பதற்றம்!

MIssile
11 ஏவுகணைகளை அடுத்தடுத்து தைவான் கடல்பகுதியில்  வீசி சீனா பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி வருவதால் தைவானில் கடல் பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
அமெரிக்காவின் முக்கிய அதிகாரி ஒருவர் தைவான் சென்றதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது
 
இதனை அடுத்து போர் பயிற்சி செய்வதாக கூறி வரும் சீனா, தைவான் கடல் பகுதியில் ஏவுகணைகளை அடுத்தடுத்து வீசி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
அமெரிக்கா பிரிட்டன் நாடுகள் தைவானுக்கு ஆதரவாக உள்ளதால் தென் சீன கடலில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
தற்போதுதான் உக்ரைன் நாட்டின் மீதான போர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ள நிலையில் தற்போது இன்னொரு போர் ஆரம்பித்து விடுமோ என்ற அச்சம் உலக நாடுகள் மத்தியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது