சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்கும் ''விக்ரம்'' பட நடிகை.
..
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் நடிகை வசந்தி எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் விக்ரம். ரூ.500 கோடி வசூல் குவித்து, உலகளவில் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.
இந்தப் படத்தில் ஏஜெண்ட் சீனா என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகை வசந்தி. இப்படத்தில் அவரை ரசிகர்களிடமும் கொண்டு சென்றது. விக்ரம் படம் மூலம் பிரபலமான நடிகை வசந்தி, தற்போது,மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் ஷுட்டிங்கில் நடிகர் மம்முட்டியுடன் நடிகை வசந்தி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.சூப்பர் ஸ்டாரின் படத்தில் முக்கிய கேரக்டர் ரோலில் நடிக்கவுள்ள வசந்திக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.