1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 24 டிசம்பர் 2019 (11:23 IST)

60 கார்கள் மோதி கோர விபத்து..

அமெரிக்காவில் பனிமூட்டத்தால் 60 கார்கள் ஒன்றோடு ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள வில்லியம்ஸ்பர்க் நகரில் பனிமூட்டம் நிலவி வருவதால் அங்குள்ள வாகன ஓட்டிகள் மிகவும் திணறி வருகின்றனர். இந்நிலையில் பனிமூட்டத்தால் முன்னால் செல்லும் வாகனங்கள் கண்களுக்கு தெரியாமல் கிட்டத்தட்ட 60க்கு மேற்பட்ட கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை. எனினும் 50 பேருக்கு மேல் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு நெடுஞ்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.