ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 8 டிசம்பர் 2022 (22:35 IST)

அர்ஜென்டினா துணை அதிபருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

arjentina vice president
அர்ஜென்டினா  நாட்டின் துணை அதிபருக்கு ஊழல் வழக்கில் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அர்ஜெண்டினா நாட்டில் கிரிஸ்டினா பெர்னாண்டஸ்  கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அதிபராகப் பதவி வகித்தார்.

அதன்பின்னர்,  துணை அதிபராக 2019 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்தார்.

அவர் அதிபராக இருந்த போது, தன் அதிகார துஷ்பிரயோகம் செய்து, பொதுப்பணிகள் குறித்த ஒப்பந்ததின் ஊழல் செய்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது.

இதுகுறித்து, அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இதை கிரிஸ்டினா மறுத்து வந்தார்.

இந்த வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை நேற்ரு முன் தினம் நீதிமன்றத்தில் நடந்தது. இதில், கிறிஸ்டினாவுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததுடன், அவர் வாழ் நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதித்து தீர்ப்பளித்தார்.

இது, கிறிஸ்டினா ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

 
Edited By Sinoj