ஞாயிறு, 2 ஏப்ரல் 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated: செவ்வாய், 22 நவம்பர் 2022 (17:44 IST)

மெஸ்ஸி இருந்தும் அதிர்ச்சி தோல்வி அடைந்த அர்ஜெண்டினா.. சவுதி அரேபியா அபார வெற்றி!

Messi
அர்ஜென்டினா அணியில் உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி இருந்தும் அந்த அணி சவுதி அரேபிய அணியிடம் தோல்வி அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
உலக கோப்பை கால்பந்தாட்டப் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் முக்கிய ஆட்டம் ஒன்று சவுதி அரேபியா மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே நடைபெற்றது 
 
அர்ஜென்டினா அணியில் மெஸ்ஸி  இருந்ததால் அந்த அணி நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சவுதி அரேபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கோல் அடிக்க மெஸ்ஸி உள்பட அர்ஜெண்டினா வீரர்களும் திணறினர் 
 
ஒரு கட்டத்தில் 2-1 என்ற கணக்கில் சவுதி அரேபியா முன்னிலையில் இருந்த நிலையில் ஆட்ட நேர முடிவில்  சவுதி அரேபியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது 
 
மெஸ்ஸி போன்ற முன்னணி வீரர்கள் இருந்தும் அர்ஜென்டினா அணி தோல்வியடைந்தது கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva