திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (08:16 IST)

உலகக்கோப்பை கால்பந்து.. காலிறுதிக்கு தகுதி பெற்ற இரண்டு அணிகள்!

football4
உலகக்கோப்பை கால்பந்து.. காலிறுதிக்கு தகுதி பெற்ற இரண்டு அணிகள்!
உலக கோப்பை கால்பந்து போட்டியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது நாக்-அவுட் சுற்றில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு நடந்த முதல் நாக்அவுட் சுற்றில் அமெரிக்க மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிய நிலையில் அமெரிக்காவை 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று நெதர்லாந்து காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது
 
அதேபோல் ஆஸ்திரேலியா மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினா அணி அபாரமாக விளையாடி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது 
 
இதனையடுத்து நெதர்லாந்து மற்றும் அர்ஜென்டினா ஆகிய இரண்டு அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இரவு பிரான்ஸ் மற்றும் போலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva