அவென்ஜர்ஸ் எண்ட்கேம் படத்தின் ஸ்பெஷல் லுக் டீசர் வெளியீடு !

Last Modified செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (19:04 IST)
2018-ல் உலக பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்ட திரைப்படம் அவென்ஜ்ர்ஸ் "இன்ஃபினிட்டி  வார்" சூப்பர் ஹீரோக்கள் படங்களை தயார் செய்யும் மார்வெல் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான இந்த படம் இந்தியாவிலும் அபார வசூலை அள்ளி குவித்தது.
 

 
இதனை கருத்தில் கொண்டு சமீபத்தில் மார்வெல் தயாரிப்பு நிறுவனம், பிரபல இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸை அவென்ஜ்ர்ஸ் எண்ட் கேம் படத்திற்கு வசனம் எழுத ஒப்பந்தம் செய்தது. அதனையடுத்து  இன்று இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் "மார்வெல் அந்தெம்" பாடல் இணையத்தில் வெளியாகி  ரெண்டிங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது. 
 
இந்நிலையில் தற்போது  ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களே காத்திருக்குக்கும் அவென்ஜர்ஸ் எண்ட்கேம் படத்தின் ஸ்பெஷல் லுக் டீசர்  ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :