1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva

தனுஷை ரூ.1 கோடி வித்தியாசத்தில் முந்திய சிவகார்த்திகேயன்.. கொண்டாடும் ரசிகர்கள்..!

தனுஷை ரூ.1 கோடி வித்தியாசத்தில் முந்திய சிவகார்த்திகேயன்.. கொண்டாடும் ரசிகர்கள்..!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே தற்போது 'டிஜிட்டல் உரிமம்'  குறித்த ஒரு சுவாரசியமான போட்டி நிலவி வருகிறது. 
 
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 51 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனுஷின் சர்வதேச மார்க்கெட் மற்றும் ராஜ்குமார் பெரியசாமியின் 'அமரன்' படத்தின் வெற்றி ஆகியவையே இந்த மிகப்பெரிய விலைக்குக் காரணமாக சொல்லப்படுகிறது.
 
இதற்கிடையே, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'பராசக்தி' திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை ஜீ5 நிறுவனம் 52 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. இது சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்திலேயே மிக அதிகபட்ச ஓடிடி விற்பனை தொகையாகக் கருதப்படுகிறது. 
 
வெறும் ஒரு கோடி ரூபாய் வித்தியாசத்தில் தனுஷை விட சிவகார்த்திகேயன் முந்தியுள்ளதாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இருப்பினும், இந்த எண்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத நிலையில், இது ஒரு ஆரோக்கியமான 'பிசினஸ் வார்' ஆக கோலிவுட்டில் பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva