அடுத்த படத்தையும் நாங்களே தயாரிக்கின்றோம்: ஜேசன் சஞ்சய்க்கு வாக்குறுதி அளித்த லைகா..!
தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் 'சிக்மா' படத்தின் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் சேர்த்து இதுவரை சுமார் 3 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
ஜேசன் சஞ்சய்யின் நேர்த்தியான இயக்கம் மற்றும் படத்தின் தரமான அவுட்புட் ஆகியவற்றை கண்டு தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் மிகுந்த வியப்படைந்துள்ளதாக தெரிகிறது.
இந்த தொடக்கத்திலேயே ஜேசன் மீது பெரும் நம்பிக்கை கொண்டுள்ள லைக்கா நிறுவனம், அவரது இரண்டாவது படத்தையும் தங்களது நிறுவனத்திலேயே பண்ணுவோம் என்று இப்போதே உறுதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுவாக அறிமுக இயக்குநர்கள் மீது இவ்வளவு சீக்கிரம் ஒரு பெரிய நிறுவனம் முதலீடு செய்வது அரிதான விஷயம். ஆனால், ஜேசன் சஞ்சய் காட்டியுள்ள திறமை, அவர் தனது தந்தை விஜய்யை போலவே திரைத்துறையில் ஒரு பெரிய இடத்தைப் பிடிப்பார் என்பதை காட்டுகிறது. இதனால் 'சிக்மா' படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
Edited by Siva
