செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By VM
Last Modified: திங்கள், 25 மார்ச் 2019 (13:28 IST)

கேம் ஆஃப் த்ரோன்ஸா... அப்படினா.... - பாகிஸ்தானில் ஒரு டிரியன் லானிஸ்டர்

ஹெச்.பி.ஓ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம்.



இதுவரை 7 சீசன்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. உலக ரசிகர்களின் ஆஸ்தான சீரிஸான கேம் ஆஃப் த்ரோன்ஸின் 8வது மற்றும் கடைசி சீஸன் வரும் ஏப்ரம் 14-ம் தேதி முதல் ஒளிபரப்பப்படும் என்று ஹெச்.பி.ஓ அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
 
பேண்டஸி வகைக் கதையை அடிப்படையாகக் கொண்ட இந்த சீரிஸின் அடிநாதமே அரியணைக் கைப்பற்றுவது தான். அதற்காக நடக்கும் சதி வேலைகள், அரச குடும்பத்தில் பாலிடிக்ஸ் என அசரடிக்கும் திருப்பங்களுடன் ஒவ்வொரு சீசனும் கடந்து போகும். 8வது சீசனுடன் இந்தத் தொடர் முடிவுக்கு வர இருக்கிறது என்ற தகவல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தாலும் அந்த சீசனுக்காக மரண வெயிட்டிங்கில் இருக்கிறார்கள் அவர்கள். 
 
இந்தநிலையில், கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரின் முக்கிய கதாபாத்திரங்களுள் ஒன்றான டிரியன் லேனிஸ்டர் போன்ற தோற்ற அமைப்பைக் கொண்ட பாகிஸ்தானியர் ஒருவரின் புகைப்படம் சமீக நாட்களாக சமூக வலைதளங்களைக் கலக்கி வருகிறது. குள்ள மனிதராகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் டிரியனைப் போன்றே அச்சு அசலாக இருக்கும் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் உருவெடுத்து விட்டது. சரி கேம் ஆஃப் த்ரோன்ஸ் பற்றி பாகிஸ்தானின் டிரியன் என்ன சொல்கிறார் என்று கேட்டால், அப்படி ஒரு தொடர் பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்கிறார் அலட்டிக்கொள்ளாமல். 25 வயதான ரோஸி கான்தான் அந்த பாகிஸ்தான் டிரியன் லானிஸ்டர். ஒரிஜினர் டிரியனான பீட்டர் டிங்க்லேஜ் 135 செ.மீ மட்டுமே உயரம் கொண்டவர். பாகிஸ்தானின் ஒரு ஹோட்டலில் வெயிட்டராக இருக்கும் ரோஸி கானும் அதே அளவு உயரம் கொண்டவரே. ஒரிஜினல் நடிகருடன் தன்னை ஒப்பிட்டு பேசும் வரை கேம் ஆஃப் த்ரோன்ஸ் பற்றி கேள்விப்பட்டதே இல்லையாம் ரோஸி கான்.