மைக்கேல் ஜாக்சன் மகள் தற்கொலைக்கு முயற்சித்தாரா ?

Last Updated: ஞாயிறு, 17 மார்ச் 2019 (14:56 IST)
பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன் மகள் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 

 
உலகமே வியந்து அண்ணாந்து பார்த்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் 2009 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக இறந்தார். இவருக்கு பாரிஸ் ஜாக்சன் என்ற மகளும், ஜோசப் ஜாக்சன் ,பிரின்ஸ் ஜாக்சன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.
 
இந்நிலையில் லீவிங் நெவெர்லாண்ட் ( Leaving Neverland ) ஆவணப்படத்தில் மைக்கேல் ஜாக்சன் சிறுவர்களை தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது. 
 
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த ஆவணப்படத்திற்கு மைக்கேல் ஜாக்சனின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மைக்கேல் ஜாக்சன் மகளும் பிரபல மாடல் அழகியுமான பாரிஸ் ஜாக்சன் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார் என்று கூறப்படுகிறது. 
 

 
இதையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில், கை நரம்பை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்ததாவும்  பிறகு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்றதாகவும்  போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாகச் செய்திகள் வெளியாயின. 
 
இது பாரிஸ் ரசிகர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் , இதுகுறித்து தற்போது பாரிஸ் ஜாக்சன் சமூக வலைத்தளத்தில் இது பொய்யான தகவல் என்று என்று ட்விட் செய்துள்ளார். 
 

 
இதற்கு முன்பும் பாரிஸ் ஜாக்சன் சிலமுறை தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . 


இதில் மேலும் படிக்கவும் :