1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
  4. Aquaman become highest grossing DC comics

அக்வாமேன் படம் வசூல் சாதனை – புத்துயிர் பெற்ற டிசி நிறுவனம் !

டார்க் நைட்
டிசி காமிக்ஸின் சூப்பர் ஹீரோ வரிசையில் தற்போது வெளியாகியுள்ள அக்வாமேன் திரைப்படம் வெற்றிகரமாக வசூல் சாதனைப் படைத்து வருகிறது.

டிசி காமிக்ஸீன் சூப்பர் ஹீரோ கேரக்டர்கள் உடனடியாக சுடசுட திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஹிட்டடிக்கும் திரைப்படங்கள் உடனடியாக பார்ட் 2, பார்ட் 3 என வரிசையாக உருவாக்க்ப்படும்.

அந்த வரிசையில் டிசி காமிக்ஸ் கதாபாத்திரங்களை மையப்படுத்தி உருவான திரைப்படங்களான 'சூப்பர்மேன்', 'ஜஸ்டிஸ் லீக்', 'சூஸைட் ஸ்க்வாட்'  உள்ளிட்ட சூப்பர்ஹீரோ படங்கள் வரிசையாக தோல்வி அடைந்தன. இந்த தோல்விகளுக்கு ஆறுதலாக 'வொண்டர் வுமன்' திரைப்படம் வெற்றி பெற்றது.  தற்போது  டிசி காமிக்ஸின் 'ஆக்வாமேன்' மிகப்பெரிய வெற்றி பெற்று வொண்டர்வுமன் படத்தின் சாதனையை முந்தியுள்ளது.

இதற்கு முன், கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கிறிஸ்டியன் பேல் மற்றும் ஹெத் லெட்ஜர் நடிப்பில் வெளியான டார்க் நைட் ரைசஸ்' திரைப்படம் சர்வதேச அளவில் 1.084 பில்லியன் டாலர்களை வசூலித்தது. டிசி சூப்பர் ஹீரோ படங்களில் மிகப்பெரிய வெற்றிப்படம் என்ற சாதனையை வைத்திருந்தது. தற்போது அக்வாமேன் படம் 1.2 பில்லியன் அமெரிக்கன் டாலர்களை வசூல் செய்து டார்க் நைட் சாதனையை முந்தியுள்ளது. இதனால் தொடர்தோலிவிகளால் சோர்ந்து போயிருந்த டிசி காமிக்ஸ் புத்துயிர் பெற்றுள்ளது.
அடுத்த கட்டுரையில்
பா. இரஞ்சித் தயாரித்து இயக்கிய "மகிழ்ச்சி " பாடல்