1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 26 செப்டம்பர் 2018 (21:54 IST)

பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய காமெடி நடிகருக்கு 10 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவில் பாலியல் புகாரில் சிக்கிய பிரபல காமெடி நடிகருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பிரபலங்கள் பாலியல் புகார்களில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது. பிரபல காமெடி நடிகரான பில் காஸ்பி மீது ஒரு பெண் பாலியல் பலாத்கார புகார் அளித்திருந்தார்.
 
15 வருடங்களுக்கு முன்பு காஸ்பி, ஆண்ட்ரியா என்ற பெண்ணிற்கு போதை மருந்து கொடுத்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.
 
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த போலீஸார், காஸ்பி அந்த பெண்ணை கற்பழித்ததை உறுதிப்படுத்தினர்.
 
அவர் மீதான குற்றம் நிரூபணம் ஆகிய நிலையில் நேற்று  நீதிமன்றம் காஸ்பிக்கு 3 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்தது.