வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 5 ஜனவரி 2019 (11:37 IST)

கேப்டன் ஹேப்பி அண்ணாச்சி !! வேற லுக்கில் விஜயகாந்த்: வைரலாகும் புகைப்படம்

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அமெரிக்காவில் மனைவி பிரேமலதாவுடன் அக்வாமேன் படம் பார்த்துள்ளார். 


 
தேமுதிக நிறுவனரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.
 
இதனால் சமீபநாட்களாக அவரது மகன் விஜயபிரபாகரன் கட்சி சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார். இதற்கிடையே தனது இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக விஜயகாந்த அண்மையில் அமெரிக்கா சென்றார். அவருடன் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் சென்றுள்ளார். 
 
சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமெரிக்காவில் தனது நண்பர்கள் மற்றும் மனைவியுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வலம் வந்தது. 


 
இந்நிலையில், நேற்று இரவு ஐமேக்ஸ் திரையரங்கில் மனைவி பிரேமலதாவுடன் அக்வாமேன் படத்தை பார்த்த ரசித்துள்ளார் விஜயகாந்த் . அந்த திரையரங்கில் அமர்ந்து இருவரும் படம் பார்க்கும் புகைப்படத்தை அவர் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 
இந்த புகைப்படம் அவரின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களால் ஷேர் செய்து கேப்டன் நலமாக உள்ளார் என்பதை தெரிவித்து வருகிறார்கள்.