திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By VM
Last Updated : திங்கள், 19 நவம்பர் 2018 (11:37 IST)

சண்டை காட்சியை போல் முத்த காட்சிக்கும் முன்னோட்டம் தேவை - பிரபல நடிகை

பிரபல பிரெஞ்சு நடிகை கல்கி கொச்சிலின், கூறுகையில், திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளில் நடிகர்களுக்கு அடிபடாமல் தடுக்க முன்னோட்டம் பார்க்கிறார்கள். இதேபோல் நடிகர் மற்றும் நடிகை இருவரும் இணைந்து நடிக்கும் மிக நெருக்கமான காட்சிகளுக்கும்  முன்னோட்டம் தேவை.
நடிகர்கள் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் முன் தங்கள் இணையை அறிந்து இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு நடிக்கும்  பொழுது மட்டுமே இத்தகைய நெருக்கமான காட்சிகளில் உயிரோட்டமாக இருக்கும். யாரென்றே தெரியாத நடிகர்களுடன் உதட்டோடு உதடு  உரசுவது போன்றும், இணை நடிகரின் உதட்டை கடிப்பது போன்றதுமான காட்சிகளில் நடித்திருக்கிறேன்" என்றார்.
 
மீடூவுக்கு பின் ராயல் கோர்ட் (லண்டனைச் சேர்ந்த நாடக குழு) வடிவமைத்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்ட நாடகத்தில் தற்போது நடித்து  வருகிறார்.
 
ரோமனிய பெண் ஒருவர் வன்புணர்வு செய்யப்பட்டது தொடர்பான அந்த நாடகத்தில் தான் தினந்தோறும் தன்னுடன் நடிக்கும் இணை  நடிகருடன் இத்தகைய காட்சிகளிள் நடிக்கலாமா வேண்டாமா என்று கலந்தலோசிப்பதாகவும், அதுவே காட்சிகளில் நடிக்கும் போது  ஒருவரையொருவர் புரிந்து கொள்ள உதவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.